ரஜினிகாந்த் பட இயக்குனரை பாராட்டிய சிவகார்த்திகேயன்..!


ரஜினிகாந்த் பட இயக்குனரை பாராட்டிய சிவகார்த்திகேயன்..!

தொடர்ந்து அதிரடியான வெற்றிப் படங்களை கொடுத்து வருவதால் சிவகார்த்திகேயனின் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரஜினிமுருகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ‘ரெமோ’ படத்திற்காக கீர்த்தி சுரேஷ் உடன் டூயட் பாடிவருகிறார் சிவா.

இந்நிலையில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் புதிய போஸ்டரை ரஞ்சித் தன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்த சிவா தன் ட்விட்டரில் கூறியதாவது…

“நீங்க வேற மாதிரி பெருசா பண்ணீறிங்க… கபாலிக்காக காத்திருக்கிறேன்” என்று தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.