கே.எஸ். ரவிக்குமாருடன் இணைந்த சிவகார்த்திகேயன்..!


கே.எஸ். ரவிக்குமாருடன் இணைந்த சிவகார்த்திகேயன்..!

தனது நண்பர் ஆர் டி ராஜா தயாரிக்கும் ரெமோ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

இதில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இந்த கூட்டணியில் பிரபல இயக்குனரும் நடிகருமான கேஎஸ் ரவிக்குமாரும் இணைந்துள்ளார்.

இவருக்கான காட்சிகளை பாதி நாளில் படமாக்கி முடித்துவிட்டார் இயக்குனர்.

ஆனால் தயாரிப்பாளரோ முழு நாள் சம்பளத்தை கொடுக்க, அதனை வாங்க மறுத்துவிட்டாராம் கேஎஸ்ஆர்.

இதனையறிந்த அறிந்த சிவகார்த்திகேயன் மற்றும் ரெமோ படக்குழுவினர் கேஎஸ் ரவிக்குமாரை பாராட்டியுள்ளனர்.