கமல் வழியில் சிவகார்த்திகேயனின் சூப்பர் முயற்சி..!


கமல் வழியில் சிவகார்த்திகேயனின் சூப்பர் முயற்சி..!

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தில் பெண் வேடம் உட்பட மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் அவர்.

இந்நிலையில், இப்படத்தில் பெண் வேடத்திற்கு குரல் கொடுக்க, ஒரு பெண் டப்பிங் ஆர்ட்டிஸ்டை ஒப்பந்தம் செய்ய இருந்தார்களாம்.

ஆனால் மிமிக்ரி கலை மூலம் பிரபலமடைந்த சிவகார்த்திகேயன், தானே அந்த குரலையும் பதிவு செய்ய காத்திருப்பதாக சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டியிடம் தெரிவித்து இருக்கிறார்.

அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடத்திற்கு கமலே தன் குரலை பதிவு செய்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது சிவகார்த்திகேயனும் இவ்வழியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.