பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து தரும் சிவகார்த்திகேயன்..!


பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து தரும் சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் தற்போது உருவாகும் பெரும்பாலான படங்களுக்கு பெயரிடப்படுவதில்லை. அப்பட ஹீரோவின் பட எண்ணிக்கையை கொண்டே அழைக்கப்பட்டு வருகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் என்ற காரணத்தையும் கூறி வருகின்றனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் இதில் சற்று முந்திக் கொண்டார் என்றே சொல்லலாம். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கீர்த்தியுடன் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார் சிவா. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியிட இருக்கிறார்கள். வருகிற பிப்ரவரி 17 அன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் அவருடைய ரசிகர்களுக்கு அவர் தரும் விருந்தாக இது அமையும் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு நர்ஸ் அக்கா என்று பெயரிடப்பட்டதாக செய்திகள் வந்ததும் அதனை சிவகார்த்திகேயன் மறுத்ததும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.