சீயான் விக்ரமுடன் இணையும் சிவகார்த்திகேயன்..!


சீயான் விக்ரமுடன் இணையும் சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருக்கும்போதே அவரது திறமையை கண்டு பாராட்டியவர் சீயான் விக்ரம். மேலும் “உனக்கு ஒரு அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது” என்றவர் விக்ரம்.

இதனை விக்ரம் முன்னிலையில் சிவகார்த்திகேயனும் பல மேடைகளில் கூறியுள்ளார். மேலும் தான் நாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க விக்ரம் ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். வெள்ள நிவாரண காலத்தில் உதவிய நல்உள்ளங்களை வாழ்த்தும் விதமாக விக்ரம் இயக்கி வரும் ‘ஸ்பிரிட் ஆப் சென்னை’ வீடியோ ஆல்பத்தில் பல முன்னணி நாயகர்களுடன் சிவகார்த்திகேயனும் நடித்து வருகிறார்.