‘தல’ அஜித்தை தோற்கடிப்பாரா சிவகார்த்திகேயன்?


‘தல’ அஜித்தை தோற்கடிப்பாரா சிவகார்த்திகேயன்?

‘காக்கி சட்டை’, ரஜினிமுருகன்’ படங்களை தொடர்ந்து அட்லியின் உதவி இயக்குனர் பாக்யராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா தயாரிக்கிறார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் சிறப்பு மேக்கப்புக்கு ‘ஐ’ திரைப்படத்தில் பணியாற்றிய ‘வீடா’ (Weta) நிறுவனத்தைச் சேர்ந்த ஷான் ஃபுட் பணியாற்றுகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண், முதியவர் மற்றும் இளைஞர் என மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘வரலாறு’ படத்திலும் அஜித் இதுபோல் மூன்று கெட்டப்பில் தோன்றியிருந்தார். அப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை அஜித் பெற்றது நாம் அறிந்ததே. தற்போது சிவகார்த்திகேயனும் அதுபோல் வேடமேற்பதால் அஜித்தின் நடிப்பை தோற்கடிப்பாரா? விருதுகளை வெல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.