நர்ஸ் கேரக்டரில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!


நர்ஸ் கேரக்டரில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

ரஜினிமுருகன் படத்தை தொடர்ந்து புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அட்லியின் உதவியாளர் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கும் இப்படத்தை ஆர்.டி. ராஜா தனது 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்க பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இப்படத்திற்கான போட்டோ ஷூட்டை  வெங்கட்ராம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று இப்படத்தின் பாடல் காட்சி எடுக்கப்பட்டது. மெட்ரோ ரயிலில் படமாக்கப்பட்ட முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன்,  கீர்த்தி சுரேஷ் மற்றும் நடனக் கலைஞர்கள் ஆகியோர் இப்பாடலுக்கு நடனமாடினார்கள். விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலுக்கு ராஜுசுந்தரம் நடனப் பயிற்சி அளித்தார்.

இப்படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பது நாம் அறிந்ததே. அதில் ஒன்றில் நர்ஸ் கேரக்டரில் நடிக்கிறாராம். சமீபத்தில் வந்த ‘மாஸ்’ படத்திலும் நயன்தாராவும், ‘காக்கி சட்டை’ படத்தில் ஸ்ரீதிவ்யாவும் நர்ஸ் கேரக்டரில் நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.