ரஜினியின் ‘ரோபா’ வழியில் சிவகார்த்திகேயனின் ரெமோ..!


ரஜினியின் ‘ரோபா’ வழியில் சிவகார்த்திகேயனின் ரெமோ..!

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஜோடியாக நடித்து வரும் படம் ‘ரெமோ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் சிவகார்த்திகேயன் நர்ஸ் வேடம் உள்ளிட்ட மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். அவருக்கு மேக்கப் போட 4 மணி நேரங்கள் ஆகிறதாம்.

எனவே, அதிகாலை 4 மணியளவில் ஸ்பாட்டுக்கு வந்துவிடும் சிவா பொறுமையாக இருந்து சிரமம் பாராமல் நடித்து வருகிறாராம்.

இந்த மேக்கப் மற்றும் இதர காட்சிகள் லீக் ஆகிவிடக் கூடாது என்பதால் செல்போன் மற்றும் கேமராக்களை உள்ளே அனுமதிப்பதில்லையாம்.

ஆனால் இந்த ஒப்பனை மற்றும் ஒத்திகை காட்சிகளை படப்பிடிக்கும் படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் சமயத்தில் யு-டியூப் தளத்தில் வெளியிடவிருக்கின்றனர்.

இதுபோல், ரஜினி தற்போது நடித்து வரும் ‘2.0’ படப்பிடிப்பு தளத்திலும் செல்போன் மற்றும் கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.