சிவகார்த்திகேயனை தொடர்ந்து லாரன்சுடன் இணையும் நடிகை..!


சிவகார்த்திகேயனை தொடர்ந்து லாரன்சுடன் இணையும் நடிகை..!

ஆர் பி சௌத்ரி தயாரிப்பில் சாய் ரமணி இயக்கத்தில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார் லாரன்ஸ்.

இதில் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்து வரும் நிலையில், இதில் ஒரு குத்து பாடலுக்கு லாரான்சுடன் ராய் லட்சுமி ஆடுகிறார்.

இதனையடுத்து தன் காஞ்சனா பாகத்தை கையில் எடுக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இதனிடையில், லாரன்சிடம் கால்ஷீட் கேட்டு ஒரு இயக்குனர் அவரை அணுகியுள்ளார். கதையை சொல்லும்போதே இதில் நாயகியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்றாராம்.

நயன் நம்ம கூட எல்லாம் நடிப்பாரா? என்று லாரன்சுக்கு சந்தேகம் இருந்ததாம்.

ஆனால் லாரன்ஸ் தரப்புக்கு நயன்தாராவிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபத்தில்தான் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் நயன்தாரா ஒப்புக்கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.