சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ ஆகஸ்ட் மாதம்?


சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ ஆகஸ்ட் மாதம்?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மூன்று ஆண்டுகள்தான் ஆகிறது. ஒன்பது படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர்களின் வசூலை நெருங்கி கொண்டிருக்கிறார். இவரது அடுத்த படம் எப்போதும் வெளியாகும் என காத்திருக்கிறது பெரும் கூட்டம். அந்தக் கூட்டத்தை காத்திருக்க வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

இந்த மூன்று ஆண்டுகளில் மளமளவென எந்தப்பிரச்சினையும் இன்றி படங்களில் நடித்தார். படங்களும் நல்ல முறையில் வெளியாகி வசூலை ஈட்டியது. ஆனால் தற்போது தயாராகியுள்ள ‘ரஜினிமுருகன்’ படம் வெளியாகாமல் தாமதமாகி கொண்டே செல்கிறது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமியின் கடன் பிரச்சினைதான் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் ‘ரஜினிமுருகன்’ படக்குழு கூறியதாவது…

‘ரஜினிமுருகன்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். அப்போது ‘ரஜினிமுருகன்’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறோம்” என்றனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். படம் வெளியாவது தாமதமானால் கூட பரவாயில்லை. வெளியீட்டு தேதி எப்போது என்பதே சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.