திரையுலகினருக்கும் கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்!


திரையுலகினருக்கும் கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்!

இன்றும் வளர்ந்து வரும் கலைஞர்களில் உன்னிப்பாக கவனிக்கப்படும் நாயகர்களில் மிக முக்கியமானவர் சிவகார்த்திகேயன்தான். தான் வளர்ந்து வரும் அதே சமயத்தில் தன்னிடம் உதவி கேட்பவர்களையும் கைவிடாது உதவி வருகிறார்.

அண்மையில் கனமழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி நாம் அறிந்ததே. இவை தவிர்த்து சினிமாவிலும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு உதவி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு விவேக் நடித்த ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தின் பாடல்களை சிவகார்த்திகேயன்தான் வெளியிட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் ட்ரைலரை வெளியிட்டார். அதுபோல் ஓரிரு தினங்களுக்கு முன் ‘அழகு குட்டி செல்லம்’ படத்தின் ஸ்பெஷல் பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சார்லஸ் இயக்கிய ‘அழகு குட்டி செல்லம்’ படத்தில் அகில், கருணாஸ், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.