சிவகார்த்திகேயனின் புதுப்பட தலைப்பு இதோ…!


சிவகார்த்திகேயனின் புதுப்பட தலைப்பு இதோ…!

‘ரஜினிமுருகன்’ படம் வெளியாகும் முன்னரே அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதில் ஒரு பெண் வேடம் உள்ளிட்ட சில வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் சிவா.

இதுநாள் வரை இப்படத்திற்கு பெயரிடப்படாமலே படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் தற்போது இதன் தலைப்பை அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரெமோ என பெயரிட்டுள்ளனர். இதனையறிந்த இவரது ரசிகர்கள், தங்களுக்கு கிடைத்த பிறந்தநாள் விருந்தாக எண்ணி, உற்சாகத்தில் உள்ளனர்.