சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த புதுத்தகவல்கள்..!


சிவகார்த்திகேயனின்  புதிய படம் குறித்த புதுத்தகவல்கள்..!

‘ரஜினிமுருகன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் புதிய படம் அறிவிப்பு மட்டுமே வந்தது. படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வந்தாலும் பூஜையுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட போட்டோ ஷுட் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று இந்த புதிய படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். அட்லியின் உதவியாளர் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதன் மூலம் ‘ரஜினிமுருகன்’ ஜோடி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பரும் மேனேஜருமான ஆர்.டி.ராஜா இப்படத்தை 24 ஏஎம் ஸ்டூடியோ சார்பாக தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடிக்கவிருப்பதால் அதற்கான பயிற்சியில் சில மாதங்களாக ஈடுபட்டு வந்தார். எனவே விக்ரமின் ‘ஐ’ படத்திற்கு சிறப்பு மேக்கப் செய்த வீடா நிறுவனத்தைச் சேர்ந்த சீன் ஃபூட் என்பவர் சிவகார்த்திகேயனுக்கு ஒப்பனை செய்யவிருக்கிறார். விரைவில் இப்படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.