சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ பெயர் காரணம்… புதிய தகவல்கள்…!


சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ பெயர் காரணம்… புதிய தகவல்கள்…!

‘ரஜினிமுருகன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி மீண்டும் ‘ரெமோ’ படத்திற்காக இணைந்து நடித்து வருகின்றனர்.

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர் டி ராஜா படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு வெளியானவுடன் இது ‘அந்நியன்’ படத்தில் விக்ரம் ஏற்ற கேரக்டர்களை போல் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் பெயருக்கான உண்மையான தகவல்கள் வந்துள்ளன.

இதில் சிவகார்த்திகேயன் நான்கு வேடம் ஏற்கிறாராம். அந்த நான்கு (REMO) கேரக்டர்களின் பெயர்களின் முதல் எழுத்து சுருக்கமே இப்படத்தின் பெயர் எனத் தெரிய வந்துள்ளது.