சிவகார்த்திகேயனுடன் இணைந்த பாலிவுட் நிறுவனம்!


சிவகார்த்திகேயனுடன் இணைந்த பாலிவுட் நிறுவனம்!

ரஜினிமுருகன் சிக்கலில் இருந்து சிவகார்த்திகேயன் 2015ஆம் ஆண்டில் மீளவில்லை. ஆனால், 2016ஆம் ஆண்டில் தொடக்கத்திலேயே மீண்டு விடுவார் என தற்போது வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் ரஜினிமுருகன் படத்தை பொங்கல் அன்று வெளியிட பாலிவுட் நிறுவனம் முன்வந்துள்ளது.

இப்படத்தை வெளியிட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது பென் மூவிஸ் என்ற பாலிவுட் நிறுவனம். ‘கஹானி’ மற்றும் ‘சிங் இஸ் ப்ளிங்’ உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை இந்நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

மேலும் லிங்குசாமி இயக்கும் ‘பையா’ படத்தின் இந்தி ரீமேக்கையும் இந்நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ரஜினி முருகன் படத்தை வெளியிட இன்று முதல் திரையரங்க ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாம்.