விஜய் விலக உள்ளே நுழைந்த சிவகார்த்திகேயன்!


விஜய் விலக உள்ளே நுழைந்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கி சட்டை’ படம் வெளிவந்து ஆறு மாதங்களை கடந்து விட்டது. ஆனால் இவர் நடித்துமுடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படம் முடிவடைந்தும் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இவர் கைவசம் ஒரு படத்தை மட்டுமே வைத்துள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

‘ரஜினிமுருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ‘ரஜினிமுருகன்’ படத்தை வாங்கியுள்ள வேந்தர் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியீடுவதற்கான முயற்சிகளில் தற்போது இறங்கியுள்ளது. இப்படத்தை செப்டம்பர் மாதம் அதாவது விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. விஜய்யின் ‘புலி’ படம் இந்த நாளில் வெளியாகவிருந்தது. ஆனால் தற்போது ‘புலி’ விலகவே சிவகார்த்திகேயன் நுழைந்து விட்டார் என கூறப்படுகிறது.

அட அண்ணன் விநாயகர் சதுர்த்தியன்று தம்பி (ரஜினி)முருகன் வர்றாரு…