அறிவிப்புக்கே அலப்பரையா…? சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அமர்க்களம்..!


அறிவிப்புக்கே அலப்பரையா…? சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அமர்க்களம்..!

ரஜினிமுருகன் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஜோடியாக நடித்து வரும் படம் ‘ரெமோ’.

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றன.

அனிருத் இசையமைக்க 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக ஆர் டி ராஜா தயாரித்து வருகிறார்.

இதுவரை இப்படம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வருகின்ற ஜூன் 9ஆம் தேதி தீம் மியூசிக்குடன் வெளியிடவுள்ளனர்.

இந்த அறிவிப்பு வந்தவுடனே #remofirstlook, #RemoThemeMusic போன்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி அவற்றை கொண்டாடி வருகின்றனர் சிவகார்த்திகேயன் ரசிகக்ர்கள்..