தலைவருடன் இணைந்து வரும் சிஷ்யன் சிவகார்த்திகேயன்..!


தலைவருடன் இணைந்து வரும் சிஷ்யன் சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இருவரும் மீண்டும் இணைந்து ரெமோ படத்திற்காக டூயட் பாடி வருகின்றனர்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் சதீஷ் நடித்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படத்தின் பாடல்களை ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட தீர்மானித்திருந்தனர்.

ஆனால், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாடல் வெளியீட்டு விழாவை தள்ளி வைத்திருக்கிறார்களாம்.

எனவே மே மாத இறுதியில் ‘ரெமோ’ இசை வெளியாகும் என கூறப்படுகிறது.

எலெக்ஷன் ரிசல்ட்டுக்காகத்தான் ரஜினியின் கபாலி படமும் தள்ளிக் வைக்கப்பட்டது.

எனவே கபாலி படமும் ரெமோ பாடல்களும் ஒன்றாக மே மாத இறுதியில் வரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.