‘ரெமோ’ படமும் சிவகார்த்திகேயனின் பயமும்…!


‘ரெமோ’ படமும் சிவகார்த்திகேயனின் பயமும்…!

இதுநாள் வரை மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.

ஆனால் தற்போது நடித்து வரும் ரெமோ படத்தை இவரது நண்பர் ராஜா ’24 AM SUDIOS’ என்ற நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார்.

நண்பரின் நிறுவனம் என்றாலும், இது சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனம் போலத்தான் என்றே கூறப்படுகிறது.

இப்படம் மிகுந்த பொருட் செலவில் தயாராகி வருவதால், படம் தொடர்பான எல்லா விஷயத்திலும் சிவா, அதிக ஈடுப்பாட்டுடன் கலந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட இதர பணிகள் மற்றும் போஸ்ட்புரடக்ஷனிலும் கூடவே இருக்கிறாராம்.

எனவே, சிறிது நாட்களாகவே கொஞ்சம் பதட்டத்துடன் சிவா காணப்படுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.