முருகதாஸ் இயக்கத்தில் இணையும் சூர்யா-மகேஷ்பாபு..!


முருகதாஸ் இயக்கத்தில் இணையும் சூர்யா-மகேஷ்பாபு..!

கடந்த வாரம் மே 20ஆம் தேதி மகேஷ் பாபு நடித்து பெரும் எதிர்பார்ப்பில் வெளியான படம் பிரமோற்சவம்.

இப்படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை எனக் கூறப்படும் நிலையில், தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் மகேஷ்பாபு.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.

இதில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தற்போது அந்த வில்லன் வேடத்தை ஏற்க எஸ்.ஜே.சூர்யா முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்து வெளியிடவுள்ளனர்.