விஜய் ரசிகர்களுக்கு ரெண்டு ராத்திரியும் சிவராத்திரிதான்!


விஜய் ரசிகர்களுக்கு ரெண்டு ராத்திரியும் சிவராத்திரிதான்!

சிம்புதேவன் இயக்கியுள்ள  விஜய்யின் ‘புலி’ வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து உள்ளனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை விநாயகர் சதுர்த்தி வெளியிட தீர்மானித்துள்ளனர். அதற்கு முன்பு படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக், பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தையும் வெளியிட படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருகிறது. அந்நாளில் விஜய் இந்தியாவில் இல்லையென்றாலும் அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடவுள்ளனர். இதற்கு தகுந்தாற்போல் ‘புலி’ படக்குழுவும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர். எனவே, ஜூன் 21ஆம் தேதி நள்ளிரவில் ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கையும், ஜூன் 22ஆம் தேதி நள்ளிரவில் இப்படத்தின் டீசரையும் வெளியிடவுள்ளனர்.

அப்படின்னா… விஜய் ரசிகர்களுக்கு ரெண்டு ராத்திரியும் சிவராத்திரிதான்…!