‘தப்பான பீப் பாட்டுக்கு ஏன் பப்ளிசிட்டி பண்றீங்க…’ சீறிய சினேகா!


‘தப்பான பீப் பாட்டுக்கு ஏன் பப்ளிசிட்டி பண்றீங்க…’ சீறிய சினேகா!

சிம்பு பாடிய பீப் சாங் குறித்து ஒவ்வொரு பிரபலங்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர் பத்திரிகை நண்பர்கள். இந்த முறை சிக்கிக் கொண்டவர் புன்னகை இளவரசி ஸ்னேகா. அவர் கூறியதாவது…

“ஒரு பாடலை ஹிட்டாக்குவது நாம்தான். பெண்களை அழகாக வர்ணிக்கும் பாடலும் வருது. கிண்டல் செய்யும் பாடலும் வருது. அடிடா அவள போன்ற பாடல்களும் வருகிறது. பாடல் வெளியானால் அதை பேசிப்பேசியே நாம் ஹிட் ஆக்கிவிடுகிறோம். இதனால எல்லாரும் கேட்க நினைக்கிறாங்க.

சொல்லப்போனால் அந்த பீப் சாங்கை நான் இன்னும் கேட்கல. ஆனா, இதுபோல கேள்வி கேட்டு அந்த பாட்டை கேட்கனுங்கிற ஆசையை நீங்களே தூண்டிவிட்டீர்கள். இளையராஜா சார்கிட்டவும் இதைத்தான் கேட்கிறீங்க?

உங்களுக்கு தெரியலையா? அது தப்பான பாடல்ன்னு. அப்புறம் ஏன் அந்த பாட்டை பற்றி கருத்து கேட்கிறீங்க?
நீங்க இதுபோல கருத்து கேட்காமல், விமர்சனம் செய்யாமல் இருந்தால் அந்த பாட்டு இப்போ இப்படி ஹிட் ஆகியிருக்காது. நீங்கதான் தேவையில்லாமல் அந்த பாட்டுக்கு பப்ளிசிட்டி கொடுக்கிறீர்கள்.

ஒரு பெண்ணாக இதுபோன்ற பாடலை நான் எதிர்க்கிறேன். சின்ன சின்ன குழந்தைகளும் பாட்டை கேட்கிறாங்க. எனவே சமுதாயத்துக்கு நல்ல பாடலை கொடுங்கள்” என்று புன்னகையுடன் கூறினார் சினேகா.