‘என் இடுப்பு உங்க ஏரியா’- விவேக்கிடம் சோனியா கெஞ்சல்!


‘என் இடுப்பு உங்க ஏரியா’- விவேக்கிடம் சோனியா கெஞ்சல்!

தமிழ் சினிமாவின் காமெடி உலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் விவேக்.  இவர் ஹீரோவாக நடித்து தற்போது வெளிவர தயாராகியுள்ள படம் ‘பாலக்காட்டு மாதவன்’. இப்படத்தில் சோனியா அகர்வால், ஷீலா, மனோபாலா, சிங்கமுத்து, செல் முருகன், ஆர்த்தி, மொட்டை ராஜேந்திரன், பாண்டு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எம்.சந்திரமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆடியோவை அனிருத் வெளியிட சிவகார்த்திகேயன் பெற்று கொண்டார்.

விழாவில் விவேக் நகைச்சுவையாக பேசினார். அவருடைய நகைச்சுவை பேச்சின் சில துளிகள்…

  • தன் கணவர் நகைச்சுவை உணர்வுடன் இருக்க வேண்டும் என எல்லாம் பெண்களும் விரும்புவர். ஆனால் என்னை போன்ற காமெடியன்களுடன் நடிக்கத் தயங்குவர்.
  • விழாவின் போது நடிகை ஆர்த்தி தண்ணீர் பாட்டில் தடுக்கி தவறி விழுந்தார். ‘ஆர்த்தி தண்ணியினால் விழுந்து விட்டார்’ என்று தவறாக குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
  • சோனியா அகர்வாலின் இடுப்பை கிள்ளுவதாக ஒரு காட்சி. நான் தயங்கி நின்றேன். ஆனால் அவரோ ‘நடிப்புதானே… ச்சும்மா கூச்சப்படாம கிள்ளுங்க. என் இடுப்பு உங்க ஏரியா” என்றார்.
  • அனிருத்தை இப்படத்தில் பாட அழைத்தபோது உடனே சரி என்று ஒப்புக் கொண்டார். வெளியே இறங்கும் சமயத்தில் என் பின்னே அனிருத் செருப்பை எடுத்துக் கொண்டு ஓடிவந்தார். எனக்கு பயம் பாடலுக்கு ஓகே சொல்லிவிட்டு செருப்போடு ஓடி வருகிறாரே என்று. ஆனால் நான் தவறுதலாக என் செருப்பை அவரது வீட்டில் விட்டுவிட்டேன். அதை கொடுப்பதற்காக அவர் ஓடிவந்தார் என்பதை பின்பு அறிந்தேன்.

இவ்வாறாக விழாவை கலகலப்பாகி பேசினார் விவேக்.