சிம்பு, தனுஷ் பட நாயகிக்கு வாய்ப்பளித்த சந்தானம்..!


சிம்பு, தனுஷ் பட நாயகிக்கு வாய்ப்பளித்த சந்தானம்..!

காமெடி வேடங்களில் ஹீரோவுக்கு நிகராக கலக்கிய சந்தானம் தற்போது தனி நாயகனாக படங்களில் நடித்து வருகிறார்.

‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் இவரது நடிப்பில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகை சோனியா அகர்வாலை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.

தனுஷ் உடன் காதல் கொண்டேன். சிம்புவுடன் கோவில் ஆகிய படங்களில் நடித்த சோனியா அகர்வால், திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்தார். பின்னர் விவாகரத்து ஆன பின் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

கடந்த வருடம் ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில் விவேக்கின் ஜோடியாக நடித்தார். தற்போது சந்தானத்துடன் சோனியா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரைப்போல், இப்படத்தில் பிரசன்னாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.