சந்தானம் இடத்தை பறித்த சூரி; ‘இனிமே இப்படித்தான்’ போல..!


சந்தானம் இடத்தை பறித்த சூரி; ‘இனிமே இப்படித்தான்’ போல..!

‘முறைமாமன்’ படத்தில் தொடங்கி முறையான குடும்ப படங்களை இயக்கி வருபவர் சுந்தர் சி. குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்ட வெற்றிகளை கொடுத்து வருபவர் இவர். விஜயகாந்த், விஜய் தவிர தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு.

அதுபோல காமெடி நடிகர்களை இவர் போல எவரும் பயன்படுத்தி வெற்றியை கொடுத்ததில்லை எனலாம். கவுண்டமணி செந்திலுடன் 9 படங்களும், வடிவேல், விவேக் உடன் 5 படங்களும், சந்தானத்துடன் 4 படங்களும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் அரண்மனை முதல் பாகத்தில் சந்தானம் நடித்திருந்தார். எனவே இரண்டாம் பாகத்திலும் அவரே நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது சந்தானம் இடத்தை சூரி பிடித்துள்ளார். சூரியை அரண்மனை-2 படத்திற்காக இயக்கவுள்ளார் சுந்தர் சி.

சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் ஒரு நாயகி இணைந்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால் இணையலாம் என்று எதிர்பார்த்த நிலையில் பூனம் பஜ்வா இணைந்துள்ளார். ஜூன் 15ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. மற்ற தொழில்நுட்ப கலைஞர்களிள் விவரங்கள் ரசிகர்களை விரைவில் வந்தடையும் எனத் தெரிகிறது.