ஸ்ரீதிவ்யா-லெட்சுமி மேனன் என்ன வித்தியாசம்..? விஷால்-சூரி விவாதம்..!


ஸ்ரீதிவ்யா-லெட்சுமி மேனன் என்ன வித்தியாசம்..? விஷால்-சூரி விவாதம்..!

குட்டிப் புலி மற்றும் கொம்பன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மருது படத்தை இயக்கியுள்ளார் முத்தையா.

தனது முந்தைய இரு படங்களிலும் லட்சுமி மேனனையே நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

ஆனால் மருது படத்தில் விஷாலின் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.

ஆனாலும் இப்படத்திலும் லட்சுமி மேனனின் பெயரை ஒரு காட்சியில் வைத்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதில் நாயகன் விஷாலிடம் சூரி பேசும்போது…

அர்னால்ட் மாதிரி ஹைட் வெயிட் இருந்தா பத்தாது. ஒரு பெண்ணை பிக்அப் பண்ணி கட்டி அணைக்கனும்.

அதன்பின்னர் ஒரு காட்சியில்… ஸ்ரீதிவ்யா உன் உயரம் இல்லை. கலர் இல்லை. மொத்தத்தில் லட்சுமி மேனன் மாதிரி இல்லை. அதானே உன் பிரச்சினை. என்று இருவரையும் ஒப்பிட்டு பேசுவதாக உள்ளது.

இது யாரை கலாய்ப்பதற்காக எழுதப்பட்டது என்பது உங்களுக்கு புரிந்து இருக்குமே…