‘புஷ்பா புருசனால் எனக்கு டைவர்ஸ் ஆகிடும்…’ – சூரி பரபரப்பு பேச்சு..!


‘புஷ்பா புருசனால் எனக்கு டைவர்ஸ் ஆகிடும்…’ – சூரி பரபரப்பு பேச்சு..!

நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’.

எழில் இயக்கியுள்ள இப்படத்தில் நிக்கி கல்ராணி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, ரவிமரியா, ரோபா சங்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார்.

இது நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் எழில் மற்றும் இசையமைப்பாளர் சத்யா ஆகிய மூவருக்கும் 10வது படமாகும். ரோபோ சங்கருக்கு இரு 25வது படம் ஆகும்.

இந்நிலையில் இப்படக்குவினர் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது சூரி பேசியதாவது….

“இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த நண்பர் விஷ்ணுவுக்கும் எழிலுக்கும் நன்றி. இதில் புஷ்பா புருசன் என்ற கேரக்டரில் நான் நடித்துள்ளேன்.

இப்படம் வந்தபிறகு புஷ்பா என்ற பெயர் கொண்ட பெண்களுக்கு முதலில் என் முகம்தான் நினைவுக்கு வரும்.

இந்த கேரக்டரால் எனக்கு கூட டைவர்ஸ் ஆகிவிடும் போல. அப்படி ஒரு காமெடியான படம் இது” என்று கலகலப்பாக பேசினார் சூரி.