சந்தானத்திற்கு கல்தா… சூரியுடன் இணையும் ஜீவா-அட்லி..!


சந்தானத்திற்கு கல்தா… சூரியுடன் இணையும் ஜீவா-அட்லி..!

தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ… காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், விவேக் உள்ளிட்ட காமெடியர்கள் ஹீரோ வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

எனவே, தற்போது சூரி காட்டில் சிரிப்பு மழை பெய்து வருகிறது.

அண்மையில் வெளியான ரஜினிமுருகன், அரண்மனை 2 படத்தில் இவரது காமெடிக்கு சிரிக்காதவர்க்ள் எவரும் இல்லை என்றே கூறலாம்.

தற்போது முதன் முறையாக ஜீவாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். ஜீவாவுடன் சந்தானம் பல படங்களில் நடித்து வந்தார். தற்போது அந்த இடத்திற்கு சூரி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘A for Apple’ என்ற நிறுவனம் சார்பாக அட்லி தயாரிக்கிறார். கமலின் உதவியாளர் ஐ.கே.ஈ என்பவர் இயக்குகிறார்.