மம்மூட்டி பட ரீமேக்கில் ரஜினி நடிப்பது உண்மையா?


மம்மூட்டி பட ரீமேக்கில் ரஜினி நடிப்பது உண்மையா?

விஜய் நடித்த ‘ப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’ ஆகிய படங்களை இயக்கியவர் பிரபல மலையாள இயக்குனர் சித்திக். இவர் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

எனவே, இதன் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் இயக்குனர் சித்திக் அவர்களும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக மலையாள ஊடகத்திற்கு பேட்டியளித்தார்.

ஆனால் தற்போது இத்தகவலை ரஜினி தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்த விரிவான அறிக்கை விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.