சான்ஸ் பிடிக்க ஸ்ரீதிவ்யா, கீர்த்திசுரேஷின் சூப்பர் டெக்னிக்!


சான்ஸ் பிடிக்க ஸ்ரீதிவ்யா, கீர்த்திசுரேஷின் சூப்பர் டெக்னிக்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்து இளம் காளையர்களை வருத்தப்படாமல் ‘குஷி’படுத்தியவர் ஸ்ரீதிவ்யா. இப்படத்தின் வெற்றியும் இவரது அழகான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து ‘ஜீவா’, ‘வெள்ளக்காரத்துரை’, ‘காக்கி சட்டை’ உள்ளிட்ட படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார்.

தற்போது அதர்வாவுடன் ‘ஈட்டி’, ஜி.வி. பிரகாஷுடன் ‘பென்சில்’, ஆர்யாவுடன் ‘ADMK’, கார்த்தியுடன் ‘காஷ்மோரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவரின் வாய்ப்புகள் இப்படியென்றால் ஒரு படம் கூட வெளிவராத நிலையில் பட வாய்ப்புகளை குவித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ‘ரஜினிமுருகன்’, ‘பாம்பு சட்டை’, ‘இது என்ன மாயம்’, தனுஷின் படம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர்களின் காட்டில்தான் வாய்ப்பு மழை பொழிகிறதாம். இருவரும் ரூ. 40 லட்சத்தை சம்பளமாக கேட்கிறார்களாம்.

தங்களை தேடி வாய்ப்பு வரும்போது ரூ. 5 லட்சத்தை வேண்டுமென்றால் குறைத்துக் கொள்கிறேன். எனக்கே அப்பட வாய்ப்பை தாருங்கள் என ஒருவரின் வாய்ப்பை மற்றவர் தட்டிப் பறிக்கிறாராம்.

அட! இந்த டெக்னிக் கூட நல்லாயிருக்கே…