ரூட் மாறும் உதயநிதி… கைகொடுப்பாரா ஸ்ரீதேனாண்டாள்..?


ரூட் மாறும் உதயநிதி… கைகொடுப்பாரா ஸ்ரீதேனாண்டாள்..?

கமலின் ‘மன்மதன் அம்பு’, விஜய்யின் ‘குருவி’, சூர்யாவின் ‘ஆதவன்’, ‘7ஆம் அறிவு’ ஆகிய படங்களை தன்னுடைய ரெட் ஜெயண்ட் சார்பாக தயாரித்தார் உதயநிதி.

தற்போது அஹ்மத் இயக்கத்தில் ‘மனிதன்’ படத்தில் ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, விவேக், ராதாரவி ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படத்தில் மஞ்சிமாவுடன் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் முதன்முறையாக மற்ற நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார் உதயநிதி.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது.