‘தல-தளபதி’ பற்றி ஸ்ரீதேவி சொல்லும் ரகசியங்கள்!


‘தல-தளபதி’ பற்றி ஸ்ரீதேவி சொல்லும் ரகசியங்கள்!

ரஜினியுடன் ‘நான் அடிமை இல்லை’ படத்தில் நடித்த ஸ்ரீதேவி அதன்பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து விலகினார். இப்படம் வெளியாகி கிட்டதட்ட 25 ஆண்டுகளை கடந்து விட்டது. அதன் பின்னர் இந்தி சினிமாவுக்கு சென்ற அவர் சில படங்களில் நடித்து பின்னர் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

அதன்பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்துவந்த இவர் ‘இங்கிலீஷ்-விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்தார். இதில் அஜித் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தற்போது விஜய்யின் ‘புலி’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு நடிகர்களுடன் நடித்தது பற்றி ஸ்ரீதேவி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில்…

“விஜய்யுடன் ‘புலி’ படத்தில் நான் ராணியாக நடித்துள்ளேன். படக்குழுவினர்களும் என்னை ராணி போன்றே மரியாதையாக நடத்தினார்கள். வித்தியாசமான கேரக்டர்கள் எப்போதும் அமைவதில்லை. ஆனால் அதுபோன்ற கேரக்டர் என் வாழ்வில் புலி படம் மூலமாக அமைந்துள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் தமிழ் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்தபோது பல இனிமையான நினைவுகள் வந்து சென்றது.

அதுபோல ‘இங்கிலீஷ்-விங்கிலீஷ் படத்தில் என்னுடன் அஜித் நடித்தார். அவர் எப்போதும் கலகலப்பாக இருப்பார். ஆனால் விஜய் ரொம்ப அமைதி. யாருடனும் விவாதம் செய்ய மாட்டார்” இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.