அஜித்தின் அழகு தங்கை யார்? ஸ்ரீதிவ்யாவா? நித்யாவா?


அஜித்தின் அழகு தங்கை யார்? ஸ்ரீதிவ்யாவா? நித்யாவா?

கௌதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து அண்மையில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தினை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கும் படத்தின் ஒவ்வொரு தகவலையும் ரசிகர்கள் ஆவலுடம் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.

வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் ‘அச்சமில்லை’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித். இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக தெரிகிறது. சந்தானமும் இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். படத்தின் நாயகியின் கேரக்டரைப் போலவே அஜித்தின் தங்கை கேரக்டரும் வலுவானதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஹீரோயின் கேரக்டருக்கு இருந்த போட்டி ஒரு சதவிகிதம் கூட தங்கை கேரக்டருக்கு இல்லை. அஜித்தின் தங்கையா? நானா? நோ சான்ஸ்  என்று கூறி ஓட்டம் பிடிக்கின்றனர் முன்னணி நாயகிகள். அண்மையில் கூட பிந்துமாதவி என்னால் முடியாது என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார் என்பதை நாங்கள் தெரிவித்திருந்தோம் அல்லவா.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யா அல்லது ‘ஓ காதல் கண்மணி’ நாயகி நித்யா மேனன் என இருவரில் யாராவது ஒருவர் அஜித்தின் தங்கையாக நடிக்கக்கூடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.