ஸ்ரீதிவ்யாவுக்கும் ‘அந்த ஆசை’ வந்துடுச்சாம்..!


ஸ்ரீதிவ்யாவுக்கும் ‘அந்த ஆசை’ வந்துடுச்சாம்..!

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. பின்னர் நாயகியாக வளர்ந்து தமிழ் திரையுலகில் கால் பதித்தார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்தற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான சீமா விருதை வென்றார்.

‘ஜீவா’, ‘வெள்ளக்காரதுரை’, ‘காக்கி சட்டை’ போன்ற படங்களை தொடர்ந்து தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இவர் கூறியதாவது…

“என் அக்கா ஸ்ரீரம்யா போல் எனக்கும் பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை. நடிகை கங்கனா ரனாவத் நடித்த ‘குயின்’ படம் என்னை மிகவும் கவர்ந்தது. அப்பட ரீமேக்கில் நடிக்க  வாய்ப்பு வந்தால் நான்தான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. ரொம்ப  சிம்பிளா இருப்பதும், அதுபோல ரொம்ப சிம்பிளா  இருக்கிறவங்களை ரொம்ப பிடிக்கும்’ என்றார்.

ஸ்ரீதிவ்யா நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘பென்சில்’ படமும், அதர்வா ஜோடியாக ‘ஈட்டி’ படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஆர்யா, பாபி சிம்ஹா, தெலுங்கு நடிகர் ராணா ஆகியோருடன் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா.