ஸ்டார் கிரிக்கெட் அப்டேட்… சூர்யாவுடன் மோதிய சிவகார்த்திகேயன்..!


ஸ்டார் கிரிக்கெட் அப்டேட்… சூர்யாவுடன் மோதிய சிவகார்த்திகேயன்..!

இன்று நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சரியாக காலை 10 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்போட்டியில் லந்து கொள்ளும் அனைத்து வீரர்களையும் ரஜினி, கமல் இருவரும் வாழ்த்தி போட்டியை துவங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், சின்னி ஜெயந்த், பாஸ்கி, பாலாஜி, சாம்ஸ், சுஹாசினி, உமா ரியாஸ் உள்ளிட்டோர் வர்ணனை செய்து வருகின்றனர்.

முதல் போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணிகள் மோதியது. இதில் சூர்யா அணி வெற்றி பெற்றது.