வேதாளம் : மாநில வாரியாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!


வேதாளம் : மாநில வாரியாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வேதாளம்’ தீபாவளி தினத்தன்று வெளியானது. இப்படத்தில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லெட்சுமி மேனன், சூரி, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களைப் போல படமும் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. வெளியான திரையரங்குகள் எல்லாம் திருவிழா கோலம் கண்டுள்ளது.

இந்நிலையில் இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 15 கோடியை வசூலித்ததாக கூறப்பட்டது. எனவே, முதல் நாளில் மட்டும் இப்படி ஒரு வசூலை ஈட்ட முடியுமா? என்ற சந்தேகம் கோலிவுட்டில் எழுந்துள்ளது. இதுகுறித்து தற்போது விரிவான விவரங்கள் கிடைத்துள்ளன.

இப்படத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று வாங்கியதால் எந்த இடையூறும் இல்லாமல் படம் வெளியானது. மேலும் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு எந்தவித எதிர்ப்பும் எழவில்லை. எனவே இது சாத்தியம்தான் என்று புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. ஒரு சில இடங்களில் டிக்கெட் கட்டணம் ரூ. 500 வரை தொட்டது குறிப்பிடத்தக்கது.

முதல்நாள் வசூல்:

தமிழ்நாடு – ரூ. 15.5 கோடி

கேரளா – ரூ. 2.10 கோடி

கர்நாடகா – ரூ. 2 கோடி

மற்ற மாநிலங்கள் – ரூ. 1.10 கோடி

2வது நாள் வசூல்:

தமிழ்நாடு – ரூ. 9 கோடி

கேரளா – ரூ. 1.70 கோடி

கர்நாடகா – ரூ. 1.45 கோடி

மற்ற மாநிலங்கள் – ரூ. 90 லட்சம்

3வது நாள் வசூல்:

தமிழ்நாடு – ரூ. 7 கோடி

கேரளா – ரூ. 1 கோடி

கர்நாடகா – ரூ. 85 கோடி

மற்ற மாநிலங்கள் – 50 லட்சம்