மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்கு தடை!


மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்கு தடை!

மணிரத்னம் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘மெண்டல் மனதில்…’ என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்து இழுத்து கொண்டிருக்கும் நேரமிது. துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம்பெற்றுள்ளது இப்பாடல். இப்படத்தின் மற்ற பாடல்களையும் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இவரது ரசிகர்கள்.

இதற்கு முன்பு இவர்களது கூட்டணியில் வெளியான ‘கடல்’ படத்தினை வாங்கி வெளியிட்டது மன்னன் பிலிம்ஸ். படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தினால் மன்னன் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 10 கோடி மேல் நஷ்டம் ஏற்பட்டிருந்தது. மணிரத்னத்திடம் நஷ்ட ஈடு கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார்.

இந்நிலையில் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் விற்றுவிட்டார் மணிரத்னம். படம் கைமாறி விட்டதால், கடல் படத்தின் நஷ்டத்தினை விநியோகஸ்தர்கள் இவரிடம் கேட்க முடியாது அல்லவா.

எனவே, ‘கடல்’ படத்தின் நஷ்டத்தினை சரி செய்யாமல் அடுத்த படத்தை மணிரத்னம் வெளியிட கூடாது என்று தடை கோரி வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவிருக்கிறதாம் மன்னன் பிலிம்ஸ்.