கேரளாவை ‘குறி’ வைக்கும் ‘தெறி’ டீம்…!


கேரளாவை ‘குறி’ வைக்கும் ‘தெறி’ டீம்…!

தமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். எனவே தற்போது தயாராகும் படங்களில் கேரளா ரசிகர்களை குறி வைத்தே சில விஷயங்களை கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு தெறி சிறந்த உதாரணமாக சொல்லப்படுகிறது.

பொதுவாக விஜய் படங்களில் அவரது கேரக்டர் பெயர் தூய தமிழ் பெயராக இருக்கும். ஆனால் ‘தெறி’ படத்தில் விஜய் கேரக்டர்களில் ஒரு பெயர் ஜோசப் குருவில்லா. இது மலையாளிகள் வைக்கும் பெயர்.

மேலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் கேரள ஸ்டைலிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் விஜய்யும் நைனிகாவும் நடித்துள்ளனர்.

அதில் கேரள கலைஞர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

இவையில்லாமல் நிறைய மலையாள வசனங்களும் படத்தில் இடம் பெற்றுள்ளதாம். அதற்கு இயக்குனர் அட்லியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

அட்லி இதற்கு முன்பு இயக்கிய ராஜா ராணி படத்தில் நடித்த பிரதீப் கோட்டயம் தெறி படத்திலும் முக்கிய கேரக்டரை ஏற்று இருக்கிறாராம்.

இவர் ராஜா ராணி படத்தில் ஜெய், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சியில் நயன்தாரா தோழியின் மலையாளி அப்பாவாக வருவார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.