விக்ரம் பிரபுவுக்கு ‘கொஞ்சிமா’வாகிறார் மஞ்சிமா…


விக்ரம் பிரபுவுக்கு ‘கொஞ்சிமா’வாகிறார் மஞ்சிமா…

மலையாளத் திரையுலகம் செழிப்பான அழகுப் பெண்களைத் தந்துகொண்டேயிருக்கிறது. நயன்தாரா, பாவனா, அமலாபால், லட்சுமிமேனன் என பட்டியல் நீள்கிறது. அந்தப் பட்டியல் புதிதாக தமிழ் சினிமாவிற்கு வாரி வழங்கியிருக்கும் நியூ க்யூட் கிஃப்ட் மஞ்சிமா மோகன்.

மஞ்சிமா தற்போது சிம்புவுடன் “அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தில் நடித்து வருகிறார். கௌதம் மேனன் இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை!

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவருகிறது. மிகவும் வேகமாக வளர்ந்து வந்த படம் சில காரணங்களால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அம்மணிக்கு வாய்ப்பு மட்டும் நிற்காமல் குவியத் தொடங்கியுள்ளது.

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய எஸ். ஆர். பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபுவுக்கு கொஞ்சிமாவாக (அட ஹீரோயினாத்தான்பா) நடிக்கவிருக்கிறார் மஞ்சிமா .

எஸ் ஆர் பிரபாகரனின் மலையாளப் பார்வை லட்சுமி மேனன், நயன்தாரா எனத் தொடர்கிறது.