‘தனி ஒருவன்’ ரீமேக்கில் வில்லனாக சுதீப் இல்லனா ராணா!


‘தனி ஒருவன்’ ரீமேக்கில் வில்லனாக சுதீப் இல்லனா ராணா!

‘ஜெயம்’ ராஜா தன் சொந்த கற்பனையில் உருவாக்கிய ‘தனி ஒருவன்’ படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. தற்போது இவரின் ‘தனி ஒருவன்’ படத்திற்கு இந்திய மொழிகளில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் இப்படத்தின் ரீமேக் உரிமை உறுதியாகியுள்ளது. ஜெயம் ரவி வேடத்தில் ராம்சரண் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமி கேரக்டரும் பெரிதாக பேசப்பட்டது. இவர் கேரக்டரில் மீண்டும் இவரையே நடிக்க கேட்டுள்ளனர். அரவிந்த்சாமி மறுக்கவே இவர் கேரக்டரில் ‘பாகுபலி படத்தில் மிரட்டிய ராணா நடிக்கக்கூடும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

இவர் தற்போது ‘அர்ஜூன், திவ்யா மற்றும் கார்த்திக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். ஒருவேளை இவரும் மறுக்கும் பட்சத்தில் ‘நான் ஈ’, ‘புலி’ படங்களில் வில்லனாக கலக்கிய சுதீப் நடிக்கலாம் எனத் தெரிகிறது. இப்படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கவுள்ளார்.