‘தெளிவான முடிவால் இன்று பெருமையாக உள்ளது…’ – ரஜினி பற்றி கமல்…!


‘தெளிவான முடிவால் இன்று பெருமையாக உள்ளது…’ – ரஜினி பற்றி கமல்…!

நேற்று நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சூர்யா தலைமையிலான ‘சென்னை சிங்கம்ஸ்’ அணி வெற்றி பெற்றதையொட்டி கமல்ஹாசன் வெற்றிக் கோப்பையை வழங்கினார்.

இதனிடையில் ரஜினி மற்றும் கமல் இருவரையும் சுஹாசினி பேட்டி கண்டார். அப்போது பல கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர்.

அப்போது ரஜினி கூறியதாவது…

“இந்த கிரிக்கெட் போட்டிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நடிகர்களுக்கு பல்வேறு கனவுகள் இருக்கும். நிச்சயம் அந்த புதிய கட்டிடம் அதையெல்லாம் நிறைவேற்றும்.” என்றார்.

கமல் கூறியதாவது…

“நட்பு என்பது அன்பு போன்றது. அது இருவரிடம் இருந்தும் வரவேண்டும். எனக்கும் ரஜினிக்கும் அது இருந்தது.

எங்களுக்குள் ஒரு தெளிவான நட்பு இருந்தது. எங்களை சுற்றியிருப்பவர்கள் என்னவெல்லாம் சொல்வார்கள் என்பதை புரிந்து கொண்டு ஒரு முடிவு எடுத்தோம். அதை சொல்ல இப்போது பெருமையாக உள்ளது” என்றார்.