தொடர்ந்து பேய் படங்களை இயக்கும் சுந்தர் சி!


தொடர்ந்து பேய் படங்களை இயக்கும் சுந்தர் சி!

ஹன்சிகா, ஆண்ட்ரியா, லஷ்மி ராய், சந்தானம், சுந்தர் சி, வினய் உள்ளிட்டோர் நடித்த ‘அரண்மனை’ என்ற படத்தை இயக்கி பேய் ஹிட் கொடுத்தவர் சுந்தர் சி. இதனைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘அரண்மனை 2′ என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா, மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வரும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனிடையில் சுந்தர் சி, ஒரு புதிய படத்தையும் தயாரித்து வருகிறார். எஸ்.பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்க ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டனர்.

காமெடி படங்களையே கொடுத்து தமிழ் சினிமாவை கலகலப்பாக்கியவர் சுந்தர் சி. தற்போது பேய் படங்களையே இயக்கியும் தயாரித்தும் வருவதால் சுந்தருக்கு என்ன ‘பேய்’ பிடிச்சிட்டா? என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றார்களாம்.