இது பேய் சீசன்; சுந்தர் சி.யின் அரண்மனை 2 ரெடி!


இது பேய் சீசன்; சுந்தர் சி.யின் அரண்மனை 2 ரெடி!

வெயிலின் கொடுமைக்கு பயந்து நாம் வெளியில் செல்லாமல் வீட்டில் ஒதுங்கி கிடக்கிறோம். வெளியில் வெயில் பயம் என்றால் வீட்டில் பேய் பயம் (ஹலோ பாஸ் நாங்க இல்லத்தரசிகளை சொல்லல) 10 நிமிடத்திற்கு ஒரு முறை வந்து நம்மை பயமுறுத்தும் ‘காஞ்சனா- 2′ டிரெய்லரை சொல்றோம்.

பள்ளித் தேர்வு முடிந்த பின்னர் குழந்தைகளின் பேச்சு இப்போது பேயை பற்றித்தான் இருக்கிறது. ஒரு புறம் பேய் பட சீசன் வரிசைக் கட்டிக் கொண்டு நிற்க, மற்றொரு புறம் ஒவ்வொரு படத்தின் 2ஆம் பாகம், 3ஆம் பாகம் என வரிசை தொடங்கியுள்ளது.

‘முனி’ வெற்றியை தொடர்ந்து ‘முனி 3′ வந்துவிட்டது. ‘சிங்கம்’ வெற்றியைத் தொடர்ந்து அதன் 3ஆம் பாகம் தயாராகவிருக்கிறது. பேய் சீசனும் பார்ட் சீசனும் நன்றாக கல்லா கட்டுவதால் ஒவ்வொரு இயக்குனரும் தங்களது முந்தைய வெற்றிப் படங்களின் அடுத்த பாகத்தை இயக்க தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி பேய் உடன் வந்து கலக்கிய அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி விட்டார் சுந்தர் சி. இதனால் அவரும் அவரது குழுவும் இரவு பகலாக கதை விவாதத்தில் ஈடுபட்டு 2ஆம் பாகத்தை உருவாக்கிவிட்டனர். அரண்மனை படத்தில் வந்து அசத்திய அம்மணிகள் ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் போன்றவர்கள் இதில் நிச்சயம் இருப்பார்கள் எனத் தெரிகிறது.

மேலும் நாயகிகள் இந்த அரண்மனைக்கு வந்தாலும் எங்களுக்கு ஓகேதான்.