குஷ்பூவுக்கு போட்டியாக சுந்தர் சி… பூனம் பஜ்வாவுடன் அரசியலில் குதிக்கிறார்..!


குஷ்பூவுக்கு போட்டியாக சுந்தர் சி… பூனம் பஜ்வாவுடன் அரசியலில் குதிக்கிறார்..!

இயக்குனர் சுந்தர் சியின் கணவரும் பிரபல நடிகையுமான குஷ்பு, தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான இவர், ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது கணவர் சுந்தர் சியும் தேர்தல் களத்தில் குதிக்கிறார். ஆனால் இது நிஜ அரசியல் அல்ல. சினிமா அரசியல்.

சுந்தர் சியின் உதவி இயக்குநர் வெங்கட்ராகவன் இயக்கும் முத்துன கத்திரிக்காய் என்ற படத்தில்தான் இந்த அரசியல்வாதி வேடம். இதில் நாயகியாக பூனம் பஜ்வா நடிக்கிறார்.

‘அவ்னி மூவிஸ்’ சார்பில் ​சுந்தர்.சி ​இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறார்.

நாற்பது வயதை நெருங்கியும், கட்ட பிரம்மச்சாரியாக இருக்கும் அரசியல்வாதி நாயகன், பூனம் பஜ்வாவை பார்த்தவுடன் காதல் கொள்கிறாராம்.

இதுதான் முத்துன கத்திரிக்காயின் கதைக்களம் என தெரிய வந்துள்ளது. இதில் அரசியல் நையாண்டிகளுக்கு பஞ்சமிருக்காதாம்.

Related