பூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்…? சுந்தர் சி. ஓபன் டாக்…


பூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்…? சுந்தர் சி. ஓபன் டாக்…

திருமண வயதை கடந்த பின்னும் திருமணமாகாதவர்களை முத்தின கத்திரிக்கா என்று அழைப்பது வழக்கம். தற்போது இப்பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

இது மலையாளத்தில் வெற்றிப் பெற்ற ‘வெள்ளி மூங்கா’ படத்தின் ரீ-மேக் ஆகும்.

சுந்தர் சி உதவியாளர் வேங்கட் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் பூனம் பஜ்வா, சதீஷ், விடிவி கணேஷ், சிங்கம்புலி, வைபவ், சிங்கப்பூர் தீபன், ரவிமரியா, யோகி பாபு உள்ளிட்ட காமெடி பட்டாளமே நடித்துள்ளது.

குஷ்பூவின் அவ்னி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் ஜீன் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சுந்தர் சி பேசியதாவது….

“என் உதவியாளருக்கு நான் நன்றிக்கடனாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அவராக வந்து என்னிடம் வாய்ப்பு கேட்கவில்லை. நான் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று சொன்னேன்.

படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் வந்துள்ளது. ஒரிஜினல் மலையாள படம் போன்று இல்லாமல் நிறைய மாற்றங்களை செய்துள்ளோம்.

நான் 40 வயது கேரக்டரில் நடிக்கிறேன். எனக்கும் ஹீரோயினுக்கும் நிறைய வயது வித்தியாச இருக்க வேண்டும் என்றாலும் அது அவ்வளவாக தெரியக் கூடாது.

அதே சமயம் படத்திற்கு ஏற்ற குடும்ப பாங்கான நாயகி வேண்டும். அப்படியே கொஞ்சம் கிளாமரும் வேண்டும்.

எனவே எல்லாம் சரியாக இருந்ததால், பூனம் பஜ்வாவை நாயகியாக தேர்ந்தெடுத்தோம்.” என்று பேசினார் சுந்தர் சி.

Related