ரஜினியே சொன்ன கபாலி ரிலீஸ் தகவல்கள்…!


ரஜினியே சொன்ன கபாலி ரிலீஸ் தகவல்கள்…!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்மவிபூஷண் வழங்கப்படவிருக்கிறது.

இந்த விருதினை பெற்றுக் கொள்வதற்காக, நேற்று தன் மனைவி லதாவுடன் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் ரஜினியை சந்தித்த பத்திரிகையாளர்கள் கேள்விகளை கேட்டனர்.

அப்போது ரஜினி கூறியது…

“பத்மவிபூஷண் விருது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கபாலி படம் மே மாத இறுதியில் அல்லது ஜுன் முதல் வாரம் வெளியாகும்.

கபாலி படத்தில் பன்ச் வசனம் இருக்கிறதா? என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. படத்தை பாருங்கள் உங்களுக்கே தெரியும். என்று கூறினார்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வா தலைவா நீ….