ரஜினி கால்ஷீட் பெற கன்டிஷன் போட்டாரா தாணு?


ரஜினி கால்ஷீட் பெற கன்டிஷன் போட்டாரா தாணு?

ரஜினி நீண்ட நாட்களுக்கு பிறகு முற்றிலும் இளம் கலைஞர்களுடன் கைகோர்த்துள்ள படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, பிரகாஷ்ராஜ், ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ரஜினியின் நெருங்கிய நண்பரான தாணு இப்படத்தை தயாரிக்கிறார் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இப்படத்தில் ரஜினி நடிக்க தாணு நிபந்தனை விதித்து மிரட்டியதாக தெரிய வந்துள்ளது. இதனிடையில் ‘லிங்கா’ நஷ்டத்தில் ரஜினி சிக்கிக் கொண்டபோது இந்த பிரச்சனையை நான் சுமூகமாக முடித்துக்கொடுக்கிறேன். ஆனால் நீங்கள் எனக்கு கால்ஷீட் தரவேண்டும். என்று தாணு கூறியதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இத்தகவலை சமீபத்திய ஒரு பேட்டியில் திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் தெரிவித்தாக தகவல்கள் வந்துள்ளன. இத்தகவலையறிந்த சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள் அப்படியிருக்காது. எங்கள் தலைவரின் ரேஞ்ச் தெரியாமல் அவ்வாறு பேசி இருப்பார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

கபாலீஸ்வரா? என்னப்பா நடக்குது…?