அடுத்த அஜித் ‘ஜெய்’யாமே… சுரபியின் சூப்பர் கணிப்பு!


அடுத்த அஜித் ‘ஜெய்’யாமே… சுரபியின் சூப்பர் கணிப்பு!

‘இவன் வேற மாதிரி’ படத்தில் அறிமுகமானவர் நடிகை சுரபி. அதன்பின்னர் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தபோதிலும் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘ஜீவா’ படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போது ‘புகழ்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இதில் இவர் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய வெற்றிமாறனின் உதவியாளர் மணிமாறன் இயக்கியுள்ளார். ரெடியன்ஸ் மீடியா வருண் மணியன், சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘வடகறி’ படத்தில் அறிமுகமான விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்தும் தன் நாயகன் குறித்தும் சுரபி கூறியதாவது… ‘படம் எல்லா தரப்பு ரசிர்களுக்கும் பிடித்த வகையில் உருவாகியுள்ளது. தன் கேரக்டரை உணர்ந்து நடிக்கும் நடிகர்களில் ஜெய்யும் ஒருவர். இதிலும் முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார். தற்போது கார் ரேஸில் ஆர்வமாக இருக்கிறார்  ஜெய். விரைவில் அஜித் போல் அவரும் வருவார்” என கூறியுள்ளார்.