‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ படத்தில் மலையாள காமெடியன் சூரஜ்!


‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ படத்தில் மலையாள காமெடியன் சூரஜ்!

இதுவரை மலையாள கரையோர நடிகைகள் தங்கள் திறமையை தமிழில் காட்டினர். ஆனால் மோகன்லால், மம்மூட்டி, ப்ருத்விராஜ், கலாபவன்மணி உள்ளிட்ட நடிகர்கள் தவிர மற்ற நடிகர்கள் மறந்தும் கூட தமிழ் பக்கம் தலை சாய்த்து படுக்கவில்லை.

ஆனால் தற்போது மலையாள திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் போராட்டம் நீடித்து வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, அங்குள்ள கலைஞர்கள் மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது பிரபல மலையாள காமெடி நடிகரான சூரஜ், நேரடி தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார். ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ படத்தில் இவர் நடிக்கிறார். விவேக் நடித்த ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தை தொடர்ந்து எம்.சந்திரமோகன் இயக்குகிறார்.

ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, பிரம்மானந்தம், மயில்சாமி, ஆர்த்தி, தேவதர்ஷினி ஆகியோருடன் வசந்த், ஜெயசிம்மா, ராஜேஷ், ஐயப்பா பைஜு, ரஞ்சனா மிஸ்ரா ஆகிய புதியவர்கள் அறிமுகமாகின்றனர். டி.எம்.ஏ.அஜிஸ் இசையமைக்க சம்சாது ஒளிப்பதிவு செய்கிறார்.

டி.என்.பிலிம்ஸ் சார்பில் ஏழுமலை தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் பொள்ளாச்சியில் தொடங்குகிறது.