கமல் படத்திற்கு செருப்பு மாலை போட்ட அஜித் அண்ணனின் ரசிகர்கள்..!


கமல் படத்திற்கு செருப்பு மாலை போட்ட அஜித் அண்ணனின் ரசிகர்கள்..!

உலக நாயகன் படத்தின் மீது இப்படி ஒரு செயலா? என அவசரப்பட வேண்டாம். இது மலையாள திரையுலகின் பிரபலமான இயக்குனர் கமல் பற்றியது.

சமீபத்தில் பிஜேபி சார்பாக ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் சுரேஷ்கோபி.

இதன் மூலம் நரேந்திரமோடியின் அடிமையாக மாறிவிட்டார் சுரேஷ்கோபி என கடுமையாக விமர்சித்திருந்தார் இயக்குனர் கமல்.

கமலின் இந்த பேச்சுக்கு சுரேஷ் கோபியின் ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஒருபடி மேலே சென்று, கமலின் படத்திற்கு செருப்புமாலை அணிவித்தனர்.

‘சுயநலவாதியான கமல், சமூக சேவை செய்து வரும் சுரேஷ் கோபியை பற்றி பேச தகுதி இல்லாதவர்” என்றும் தெரிவித்தனர்.

தமிழில் தீனா படத்தில் அஜித்தின் அண்ணனாகவும், விக்ரமின் ஐ படத்தில் வில்லனாகவும் நடித்தவர் சுரேஷ்கோபி என்பது குறிப்பிடத்தக்கது.